சிஎஸ்கே மட்டுமல்ல.. உலகக் கோப்பையிலும் இந்த வீரர் விளையாட வாய்ப்பில்லை.. சோகத்தில் ரசிகர்கள்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விலகியுள்ள தீபக் சஹார் உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
Deepak Chahar
Deepak Chahar

கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது.

இந்தக் காயத்தின் காரணமாக தீபக் சஹார் இந்த ஐபில் தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. மேலும் காயம் குணமடைந்து அணிக்கும் திரும்பும் விதமாக பெங்களூரு தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பெங்களூர் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் முழுவதுமாக பங்கேற்கமாட்டார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Deepak Chahar IPL 2022
Deepak Chahar IPL 2022

ஐபிஎல் போட்டியில் விளையாடாவிட்டாலும் உலகக் கோப்பை போட்டியிலாவது தீபக் சஹார் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமாக 4 மாதம் ஆகும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனால் தீபக் சஹாரை உலகக் கோப்பை போட்டியிலும் பார்க்க முடியாது என்ற சோகத்தில் தீபக் சஹார் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com