சி.எஸ்.கே. மற்றும் ஹெச்.எஸ்.கே. பிராண்ட் சிமெண்ட் அறிமுக நிகழ்ச்சி

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் சி.எஸ்.கே. மற்றும் ஹெச்.எஸ்.கே. பிராண்ட் சிமெண்ட் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது
சி.எஸ்.கே. மற்றும் ஹெச்.எஸ்.கே. பிராண்ட் சிமெண்ட் அறிமுக நிகழ்ச்சி

இந்தியா சிமெண்ட் நிறுவனம் கான்க்ரீட் சூப்பர் கிங்ஸ்(சி.எஸ்.கே ) மற்றும் ஹலோ சூப்பர் கிங்ஸ் (ஹெச்.எஸ்.கே. )என்ற பெயரில் புதிய வகை சிமெண்ட் பிராண்டுகளை தொடங்கியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தையாக்கல் துறையின் துணை தலைவர் மகேந்திர சிங் தோனி வீடியோ பதிவு மூலம் புதிய பிராண்டுகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சிமெண்ட் என்பது ஒரு நாள் மட்டுமல்லாமல் வாழ்நாள் காலம் முழுவதும் நீடித்து நிலைக்கக் கூடிய ஆற்றல் உள்ள தயாரிப்பாக இருக்க வேண்டும் என்ற அவர் கட்டுமானப்பணி நிறுவனங்களுக்கு உதவுவதற்காக சி.எஸ்.கே சிமெண்ட் பிராண்ட் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com