சென்னையில் செஸ் ஒலிம்பியாட் : தமிழகத்திற்கு கிடைத்த பெருமை !!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் : தமிழகத்திற்கு கிடைத்த பெருமை !!

செஸ் ஒலிம்பியாட் எனப்படும் சர்வதேச அளவில் நடைபெறும் செஸ்போட்டி இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது.
Published on

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தொடரில் கிட்டதட்ட 180 நாடுகளிலிருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முதலில் இது ரஷ்யாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் பெயரில் ஒலிம்பியாட் என்று இருந்தாலும், இதற்கும் ஒலிம்பிக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. செஸ் என்ற தனி நபர் விளையாட்டை ஒரு அணியாக விளையாடினால் எப்படி இருக்கும். அதற்கு பெயர் தான் செஸ் ஒலிம்பியாட். ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெற்று இருப்பார்கள். இந்த 4 பேரும், நான்கு வெவ்வேறு செஸ் போர்டில் ஒரே நேரத்தில் விளையாடுவார்கள்

விதிகள் வழக்கமான செஸ் போட்டி மாதிரி இல்லாமல் இதற்கு குறிப்பிட்ட நேரத்தில் காய்களை நகர்த்தி ஆட்டத்தை முடிக்க வேண்டும். வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் ஏதுமில்லை. போட்டி சமனில் முடிந்தால் புள்ளிகள் வழங்கப்படாது. ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடைபெறும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு இது ஆன்லைனில் நடத்தப்பட்டது.

இம்முறை இந்தியாவில் போட்டி நடைபெறுதால், பல்வேறு 4 பேர் கொண்ட அணிகளை களமிறக்கி வெற்றி பெறும் வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று அதிக இந்திய செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஆதரவால் தான் இந்தப் போட்டியை நடத்த முடிவதாக செஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மகிழ்ச்சி இந்தப் போட்டி வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவின் செஸ் தலைநகரமான சென்னையில் போட்டி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது, உலகம் முழுவதும் உள்ள ராஜா, ராணிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

logo
vnews27
www.vnews27.com