ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. சென்னை அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் , ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி குறித்து முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இந்த சீசனில் முதல் முறை நேருக்கு நேர் மோதுகின்றன. இதுகுறித்து ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போன்ற உணர்வை தருகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
நான் மும்பை அணியிலும் விளையாடி இருக்கிறேன். சென்னை அணியிலும் விளையாடி இருக்கிறேன். 10 வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவிட்டு பின்னர் முதன்முதலில் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது வித்தியாசமாக உணர்ந்தேன்.
என்னைப் பொறுத்தவரை இரு அணிகளுமே சிறப்பானவை. இந்த இரண்டு ஐபிஎல் ஜாம்பவான்கள் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் உணர்வை அளிக்கிறது."
மும்பை அணிக்கு எதிராக நான் முதலில் களத்தில் இறங்கியபோது, அந்த ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் இருந்ததால், போட்டி விரைவில் முடிவடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த ஆட்டம் சீக்கிரம் முடிந்து சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டது " என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.