பெங்களூர் அணிக்கு இவர்தான் கேப்டன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பெங்களூர் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் அணிக்கு இவர்தான் கேப்டன்... மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஐபிஎல் 15-வது தொடர் வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்களுக்கான ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்து அப்டேட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னணி அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தற்போது வரை அந்த அணியின் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை. இதற்கு மூன்று சீனியர் வீரர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான பட்டியலில் இருந்தனர். இதில் இருந்து அனுபமிக்க ஒருவரை கேப்டனாக எடுக்க தான் நீண்ட ஆலசோனை நடந்து வருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மூவரில் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலிக்கு அடுத்தபடியாக சர்வதேச கேப்டன் பதவியில் டுபிளெசிஸ் உள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் நீண்ட அனுபவம் உள்ளது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com