ஐசிசி-யின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாபர் அசாம், பேட் கம்மின்ஸ் பெயர்கள் பரிந்துரை!!

ஐசிசி-யின் மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பாபர் அசாம், பேட் கம்மின்ஸ் பெயர்கள் பரிந்துரை!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக்காலமாக அறிவித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி தற்போது பரிந்துரைத்து உள்ளது. இந்த பரிந்துரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரைக் பிராத்வேட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

அதே போல் பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன் , லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெற்றியாளர் யார் என்பதை ஐசிசி விரைவில் தேர்வு செய்து அறிவிக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com