ஆசிய விளையாட்டு : இந்திய பேட்மிண்டன் அணிக்கு 14 வயது வீராங்கனை தேர்வு !!

உன்னத்தி ஹூடா
உன்னத்தி ஹூடா

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் மே 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையும், ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 10-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் நடக்கிறது.

இந்த மூன்று போட்டிக்கான தகுதித் தேர்வு டெல்லியில் 6 நாட்கள் நடைபெற்றது. இதில் 5 பிரிவுகளில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள், தரவரிசையில் டாப்-15 இடத்திற்குள் இருப்பவர்களுடன் சேர்த்து இந்திய பேட்மிண்டன் அணியை பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதில் ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியில் 14 வயதே நிரம்பிய ‘இளம் புயல்’ அரியானாவைச் சேர்ந்த உன்னத்தி ஹூடா இடம் பெற்றுள்ளார். தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள சாய்னா நேவால் தகுதி சுற்று போட்டியை புறக்கணித்ததால் அணியில் இடம் பெறவில்லை.

காமன்வெல்த் விளையாட்டுக்கான ஆண்கள் அணியில் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி, சுமீத் ரெட்டி. பெண்கள் அணி: பி.வி.சிந்து, ஆகார்ஷி காஷ்யப், திரீசா ஜாலி, காயத்ரி, அஸ்வினி. ஆசிய விளையாட்டு மற்றும் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com