செர்பியா ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ் !!

செர்பியா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மோதினர்.
செர்பியா ஓபன்  சாம்பியன் பட்டம் வென்றார் ஆண்ட்ரே ரூப்லெவ் !!

முதல் செட்டை ஆண்ட்ரே ரூப்லெவ் 6- 2 என எளிதில் வென்றார். இரண்டாவது சுற்றில் ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது சுற்றில் சுதாரித்து ஆடிய ரூப்லெவ் 6-0 என கைப்பற்றினார்.

இறுதியில், ரூப்லெவ் 6-2, 6-7(4), 6-0 என்ற செட் கணக்கில் டென்னிஸ் தரவரிசையில் உலக அளவில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை போராடி வீழ்த்தி ஆண்ட்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டி மொத்தம் இரண்டு மணி நேரம் 29 நிமிடங்கள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com