36 வயதான அலிசன் பெலிக்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்கம் உள்பட 11 பதக்கங்களும், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 13 தங்கப்பதக்கமும் வென்ற சாதனையாளர் ஆவார்.
ஒலிம்பிக் தடகளத்தில்அதிக பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பைபெற்ற 36 வயதான அலிசன் பெலிக்ஸ்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறு வயதில் எனது காலை, கோழி கால்கள் போன்று இருப்பதாக கிண்டலடிப்பார்கள். இதனால் தடகளத்தில் இந்த அளவுக்கு சாதிப்பேன் என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லை.
எனது வாழ்க்கைமுறையை மாற்றிய இந்த விளையாட்டுக்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த சீசனுடன் விளையாட்டில் இருந்து விடைபெறுகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
2018-ம் ஆண்டில் பெலிக்சுக்கு பெண் குழந்தை பிறந்தது அதன்பிறகு மீண்டும் களம் திரும்பிய அவர் 2019-ம் ஆண்டு உலக தடகளத்தில் தொடர் ஓட்டத்தில் 2 தங்கம் வென்றார். தாய்மை அடைந்த பின் தங்கம் வென்று சாதித்தவர் என்ற பெருமையை பெற்றவர் அலிசன் பெலிக்ஸ்.