3-வது நடுவர் தலையிட்டு இருக்க வேண்டும் : நோபால் சர்ச்சையில் ரி‌ஷப்பண்ட் அதிருப்தி !!

ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணி டெல்லியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.
3-வது நடுவர் தலையிட்டு இருக்க வேண்டும் : நோபால் சர்ச்சையில் ரி‌ஷப்பண்ட் அதிருப்தி !!

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன் குவித்தது.

பின்னர் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் 15 ரன்னில் வெற்றி பெற்றது.

கேப்டன் ரி‌ஷப் பண்ட் 24 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி , 2 சிக்சர்), லலித் யாதவ் 24 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ராவ்மேன் போவெல் 15 பந்தில் 36 ரன்னும் (5 சிக்சர்) எடுத்தனர். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும், சாஹல், மெக்காய் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

டெல்லி அணியின் வெற்றிக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் 36 ரன் தேவைப்பட்டது. மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்தில் போவெல் 3 சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் 3-வது பந்து இடுப்பு உயரம் அளவுக்கு வீசப்பட்டதாகவும், இதற்கு நோபால் கொடுக்க வேண்டும் என்றும் டெல்லி அணியினர் முறையிட்டனர்.

இதற்கு ஆடுகள நடுவர் நோபால் கொடுக்க மறுத்தார். இதனால் மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் விரக்தி அடைந்தார். தனது பேட்ஸ்மேன்களை ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு சைகை செய்ததால் பரபரப்பு நிலவியது.

டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் பிரவீன் அமரேயை களத்துக்கு அனுப்பினார். 3-வது நடுவரின் முடிவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஆடுகள நடுவர் நிராகரித்தார். இது தவிர பவுண்டரி லைனில் இருந்த பட்லர், ரி‌ஷப்பண்ட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் போட்டியில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. பின்னர் எஞ்சிய 3 பந்துகளில் டெல்லி அணியால் 2 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 15 ரன்னில் தோற்றது.

நோபால் கொடுக்கப்பட்டதால் டெல்லி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் அதிருப்தி அடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் இறுதியில் போவெல் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். நோபால் எங்களுக்கு விலை மதிப்பற்றதாக இருந்து இருக்கும் என நினைத்தேன். ஆனால் அது என் கட்டுப்பாட்டில் இல்லை.

நோபால் கொடுக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அனைவருக்கும் நோபால் என்று தெரிந்தது. இதில் 3-வது நடுவர் தலையிட்டு அது நோபால் என்று கூறி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் நான் விதியை மாற்ற முடியாது. எனது குழுவை களத்திற்கு அனுப்பியது வெளிப்படையாக சரியானது இல்லை. அது பதற்றமான நேரமாகும். இது இரு தரப்பினரின் தவறு என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு ரி‌ஷப்பண்ட் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com