ஷப் பண்ட், ஷர்துல் தாகூர் உள்பட 3 பேருக்கு அபராதம் !!

ஷப் பண்ட், ஷர்துல் தாகூர் உள்பட 3 பேருக்கு அபராதம் !!

ஐபிஎல் கிரிக்கெட் போடியில் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி ஓவரில் டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் மெக்காய் வீசினார். இவர் முதல் 2 ஓவரில் மட்டும் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை பவல் சிக்சர் விளாசினார். 3 -வது பந்து இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார்.

ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியே வருமாறு கை சைகை காட்டினார். களத்தில் இருந்த நடுவரிடம் சென்று டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் முறையிட்டார். இதனையடுத்து முடிவு டிவி நடுவரிடம் சென்றது. அதனை டிவி அம்பர் நோபால் இல்லை என அறிவித்தார்.

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு போட்டியில் இருந்து 50 சதவீதமும், உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100 சதவீதம் அபராதமும் ஒரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com