ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு எஞ்சியிருந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது.
அந்த அணியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் செல்ல இருக்கிறார். அந்த தொடரை முடித்தவுடன் இந்தியா திரும்பும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணியுடனான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடரின்போது அயர்லாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் அணிக்கு பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தற்போஉ உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அயர்லாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மண் செல்வார் எனத் தெரிவித்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விவிஎஸ் லக்ஷமண் இருக்கிறார். அயர்லாந்து செல்லும் அணி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த அணியுடன் அவர் இணைய இருக்கிறார்.
விவிஎஸ் லக்ஷ்மண் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இருந்தார்.