மாணவன் ஒருவன் தனியார் துறையில் வேலைப்பார்த்து வரும் பணத்தையும், தாய், தந்தை, சகோதரன் இவர்களிடம் வாங்கும் பணத்தையும் என்ன தான் செய்தார்... வீட்டிற்கு எந்த செலவையும் பொருட்படுத்தாமல் இருந்ததற்கு என்ன தான் காரணம்..? அலசி ஆராய்ந்து பார்ப்பதற்குள் வந்தது ஒரு அதிர்ச்சி தகவல்...
ஆன்லைனில் ரம்மி விளையாட குடும்பத்தினர் பணம் தராததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றான், பிறகு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தினை சேர்ந்த, இவர் தனியார் துறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இதில் ஒருவன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
மற்றும் ஒருவன் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் தனது தந்தையுடன் சென்டிரிங் வேலைக்கும் சென்றுள்ளர். மேலும் அவ்வப்போது தனது தந்தை, தாய், சகோதாரன் ஆகியோரிடம் இண்டர்வியூக்கு செல்ல வேண்டும் என்றும், கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும் என்றும் பணம் வாங்கியுள்ளார். சென்டிரிங் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தினையும் வீட்டிற்கு தராமல் இருந்துள்ளார்.
காரணத்தை கண்டுபிடித்த தாய் தந்தை இருவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... தன் மகன் எப்போதும் செல்போன் கையுமாக இருப்பான் ஏதோ விளையாடுகிறான் என்று விட்டு விட்டனர் பின்பு தான் தெரிந்தது அவன் விளையாடியது ஆன்லைன் ரம்மி என்று...
எப்படியாவது தடுத்து விடலாம் என்று எண்ணிய அவர்களுக்கு கிட்டியது ஏமாற்றம் தான்.. தன் மகனின் ஆன்லைன் விளையாட்டை நிறுத்த பணம் தர மறுத்தனர் மாணவனின் பெற்றோர்.. பாவம் அவர்களுக்கு அப்போ தெரியவில்லை இதனால் தன் மகன் இறப்பான் என்று... ஆம் முடிவில் மாணவன் தற்கொலை செய்து கொண்டான்..
பெற்றோர்களே...! பிள்ளைகள் கையில் செல்போன் இருந்தால் நமக்கு எந்த தொந்தரவும் இல்லை... நாம ஜாலியா இருக்கலாம் என்று நினைப்போம். முடிவில் பிள்ளைகளே இல்லாமல் போய்விடுவார்கள் இந்த மாணவன் போல்... பிள்ளைகளை பெற்றதோடு மட்டும் விட்டுவிடாமல் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரும் வரை நம் பார்வை அவர்கள் மீது இருந்தால் எத்தனை ஆன்லைன் விளையாட்டு வந்தாலும் நமக்கு கவலை இருக்காது...
சிந்திபோம்...! பிள்ளைகளை நல்வழிப்படுத்துவோம்...!