ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா?கவலை வேண்டாம் ஈஸியாக வாங்கலாம்!

ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா?கவலை வேண்டாம் ஈஸியாக வாங்கலாம்!
Thiru

ரேஷன் கார்டு நமது நாட்டில் மிக முக்கியமான ஆவணமாகும். இதன் மூலம், பயனர்கள் அரசாங்கம் அளிக்கும் இலவச ரேஷனை பெறலாம். ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பிற முக்கிய ஆவணங்களில் ரேஷன் கார்டும் ஒன்று. பல இடங்களில் இது அடையாளச் சான்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் நாம் நமது ரேஷன் கார்டை தொலைத்து விடுகிறோம். வேறு கார்டு வாங்குவது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இனிமேல் அவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். மிகவும் சுலபமான வழியில் ரேஷன் கார்டின் நகலை பெற்று விடலாம். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் நகல் ரேஷன் அட்டையை எளிதாக உருவாக்கலாம்.

ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் நகல் ரேஷன் கார்டை எப்படி பெறலாம் என்பதை கீழ் காணலாம்.

முதலில் நகல் ரேஷன் அட்டையை உருவாக்க, முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். இப்போது முகப்புப் பக்கம் உங்கள் முன் திறக்கும். அதன் பிறகு நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் இணைப்பை கிளிக் செய்தால் ஒரு ஆன்லைன் படிவம் உங்கள் ஓபனாகும். படிவத்தில் கேட்கப்படும் அனைத்து முக்கியமான தகவல்களையும் நிரப்ப வேண்டும். இப்போது கோரப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றி அவற்றை சப்மிட் செய்ய வேண்டும். இந்தப் வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆஃப்லைனில் நகல் ரேஷன் கார்டை உருவாக்க, நீங்கள் மாவட்ட உணவு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

பின்னர் மையத்தில் நகல் ரேஷன் கார்டுக்கான படிவத்தை பெறவும். படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், டிப்போ ஹோல்டர் அறிக்கை, அபராதக் கட்டணத்தின் இரண்டு ரசீதுகள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு, அதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் நகல் ரேஷன் கார்டைப் பெறுவீர்கள்.

நகல் ரேஷன் கார்டை உருவாக்க, ரேஷன் கார்டு எண், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை , குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவை தேவைப்படும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com