உங்கள் கணவர் உங்களை அவமதிக்கிறாரா...?? காரணம் தெரிஞ்சிக்கனுமா...?

உங்கள் கணவர் உங்களை அவமதிக்கிறாரா...?? காரணம் தெரிஞ்சிக்கனுமா...?

கணவன், மனைவி இரண்டுப் பேருமே ஒருவொருக்கு ஒருவர் , அன்போடும், அர்ப்பணிப்போடும் வாழ்ந்தால் இல்லறம், நல்லறமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சில ஆண்கள் தங்கள் மனைவியை வேண்டுமென்றே அவமதிப்பார்கள் . அப்படிபட்ட கணவரை கண்டுகொள்வது என்பது பெரிய விஷயம் இல்லை. உங்களிடம் எப்போதுமே நேர்மையை கடைப்பிடிக்காமலும் அல்லது உங்கள் மீது எப்போதும் எரிந்து விழும் கணவர், உங்களுக்கு மதிப்பு அளிக்காமல் அவமதிக்கிறார் என்பதை சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக, கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் அதிகரித்து, இருவரும் பிரிந்து வீட்டீர்கள் என்றால், உங்கள் கணவர் இத்தனை நாள் பாசாங்கு செய்திருக்கிறார் என்பதை சுலபமாக நீங்கள் புரிந்துக்கொள்ளலாம். இருவரும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து, மீண்டும் மனைவியின் மனதில் இடம் பிடிக்கும் நோக்கில், ரொம்பவே நல்லவர் போல பேச தொடங்குவார்.

பிரிவுக்கு மனைவி தான் என்று குறை கூறுவது : உங்கள் கணவர், ”பிரிவுக்கு காரணம் நீ தான்’’ என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவார். ஆனால், பெரும்பாலான நேரங்களில், இருவருடைய செயல்பாடுகளுமே பிரிவுக்கு காரணமாக இருக்கும். இருப்பினும், இதை மறைத்துவிட்டு, உங்கள் கணவர் உங்களை மட்டும் குற்றம்சாட்டுகிறார் என்றால், உங்கள் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, மீண்டும் இணைய விரும்புகிறார் என்று அர்த்தம்.

மீண்டும் இணைவதற்கு உங்கள் கணவர் முயற்சி செய்கிறார் என்றால், அவர் இன்னும் முழு மனதாக உங்களை விட்டு பிரியவில்லை என்று அர்த்தம். என்னென்ன வாய்ப்புகள் கிடைக்குமோ, அதையெல்லாம் பயன்படுத்தி உங்களுடன் இணைப்பில் இருக்க முயற்சிக்கிறார் என்றால், மீண்டும் இணைய விரும்புகிறார் என்றே அர்த்தம்.

நீங்கள் இருவரும் சேர்ந்து கழித்த பொழுதுகள் குறித்து, மலரும் நினைவுகளாக உங்கள் கணவர் பேச தொடங்குவார். நல்ல நினைவுகளை மட்டும் மீண்டும், மீண்டும் தூண்டி, உங்கள் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார் என்று அர்த்தம்.

என்ன மனைவிமார்களே... உங்கள் கணவர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்...! வாழும் வாழ்க்கையை கருத்துடனும் சந்தோஷத்துடனும் வாழக் கற்றுக்கொண்டு தங்கள் கணவர் மார்களை அவ்வழியே பயணிக்க முயற்சி செய்வோமா...?

சிந்திப்போம்... செயல்ப்படுத்துவோம்...

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com