உலகில் உயிர்கள் உருவாக என்ன காரணம் தெரியுமா? -விஞ்ஞானிகள்

உலகில் உயிர்கள் உருவாக என்ன காரணம் தெரியுமா? -விஞ்ஞானிகள்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலி, எரிச்சல், இதய துடிப்பின் வேகம் அதிகரிப்பு, வாந்தி முதலியவற்றை சந்திக்கநேரிடும். பின்னர் குறைந்த இரத்த அழுத்தம், மெதுவான இதய துடிப்பு,மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும்.

இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாது. ஒருவேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும்.

இதற்கு காரணம் அதில் கலந்துள்ள ஹைட்ரஜன் சயனைடு கேஸ் மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில்லால் எரிகின்ற வீடு, மெட்டல் புகைகளில் இருந்தும் வருகின்றது

சயனைடு எனபது வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம். ரசாயனம் உயிரை போக்ககூடியதாக இருந்தாலும் சயனைடு உயிருக்கு தேவையான மூலக்கூறுகளை உருவாக்குவதற்கு ஒரு அத்தியாவசிய கலவை என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும், வேற்றுகிரக கிரகங்களில் அதற்கான அறிகுறிகளைத் தேடுவது, பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர்களைக் கண்டறிய உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவை, கார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உருவாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு உதவலாம்' என்று கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com