சொன்ன பேச்சை குழந்தைகள் கேட்கவில்லையா?

சொன்ன பேச்சை  குழந்தைகள் கேட்கவில்லையா?

குழந்தை பேசவும், சிந்தித்து செயல்படவும் ஆரம்பிக்கும் போதே அடிப்படையான சில விதிகளை வகுத்துக்கொள்ளத் தொடங்குங்கள். வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல மதிப்புகள், சரியான நடைமுறைகள் மற்றும் நேர்மறையான நம்பிக்கைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அப்போது தான் நல்ல குண நலன்கள் குழந்தைகள் வளரும் வரை உடன் இருக்கும்.

குழந்தைகளுக்கு அட்வைஸ் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க கூடாது. உங்கள் பிள்ளை சொல்வதைக் கேட்கும் திறனை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். பெற்றோரைப் பொறுத்தவரை, தகவல்தொடர்பு இரு வழி செயல்முறையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை உங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல, உங்கள் குழந்தைக்குக் காது கொடுக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றோரைப் பொறுத்தவரை, தகவல்தொடர்பு இரு வழி செயல்முறையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை உங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல, உங்கள் குழந்தைக்குக் காது கொடுக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பிள்ளைகளுக்கு உங்கள் மீது நம்பிக்கை அதிகரிப்பதோடு, உங்கள் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணமும் உருவாகும்.

குழந்தைகளை விமர்சிக்காதீர்கள்: ஆக்கபூர்வமான விமர்சனம் நல்லதது தான், ஆனால், குறைகளை மட்டுமே பட்டியலிட்டு பேசி, குழந்தைகள் மனதை காயப்படுத்தினால் அவர்கள் உங்களுடன் பேசுவதையே தவிர்க்க நேரிடும். இதனால் பின் நாட்களில் அவர்கள் உங்கள் பேச்சை முற்றிலுமாக கேட்காமல் போக வாய்ப்புண்டு.

குழந்தைகளிடம் அதீத கோபம், அடம்பிடிப்பது, கத்தி கூச்சலிடுவது போன்ற ஏதாவது தீய நடந்தைகள் தென்பட்டால் அதனை முளையிலேயே கிள்ளி எரிவது நல்லது. அதற்கான மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை கையில் எடுக்காமல் பேசி புரிய வைக்க பாருங்கள்.

குழந்தைகள் பெற்றோரைப் பார்த்து தான் வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு முதல் ரோல் மாடல் என்றால் அது பெற்றோர் தான், எனவே நீங்கள் பொய் சொன்னால், கோபப்பட்டால், அடுத்தவரைப் பற்றி இழிவாக பேசினால் உங்கள் குழந்தையும் அதையே தான் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com