உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நடைபயிற்சி... அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைப்பு!!

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பயிற்சியை அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நடைபயிற்சி... அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைப்பு!!

உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நடைபயிற்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைப்பயிற்சியை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைப்பயிற்சியானது, தூத்துக்குடி ரோச் பூங்கா முதல் படகு குழாம் வரை நடந்தே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மாவட்டத்தில் 750 இடங்களில் இன்று ரத்த அழுத்த முகாம் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

முன்னதாக, அமைச்சர் கீதா ஜீவன் கனிமொழி எம்பி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் த்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com