பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் !!

கே.என்.நேரு
கே.என்.நேரு

பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தருமபுரி நகராட்சியுடன் அருகில் உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை இணைத்து தர்மபுரி மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் நகர்புறங்கள் அதிகம் உள்ளதாகவும், 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 45. 38 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 53 சதவீத மக்கள் நகரங்களில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நகர்ப்புறங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 28 பேருராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறிய அவர்,90க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் அமைக்கலாம் என்ற கருத்துரு அரசிடம் உள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் தமிழகம் முழுவதும் பொருளாதார நிலை, வருமானம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அளிக்கக்கூடிய அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com