இளையராஜாவின் கருத்துக்கு ஏன் எதிர்ப்பு?-குஷ்பு கேள்வி!!

இளையராஜாவின் கருத்துக்கு ஏன் எதிர்ப்பு?-குஷ்பு கேள்வி!!

கருத்துச் சுதந்திரம் கேட்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிர்வாகிகள் கருணாகராஜன், நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியின் ஆண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறோம்.

மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள் தான் இன்று ஒன்று திரண்டு அம்பேத்கர் மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com