அதிமுக கவுன்சிலரை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது? நீதிமன்றம் அதிரடி!

அதிமுக-வை சேர்ந்த வார்டு கவுன்சிலரை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கவுன்சிலரை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது? நீதிமன்றம் அதிரடி!

அதிமுக சார்பில் போட்டியிட்டு கூடலூர் நகராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது அனுப் கான் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தில் தனக்கு பங்கு உள்ளதாகவும், அதை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என கூறி, வேட்புமனுவை நிராகரிக்க கோரி திமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி பாண்டியராஜ் என்பவர் அதே குற்றச்சாட்டுகளுடன் கூடலூர் நகராட்சி ஆணையரிடம் புகார் அளிதத்தாக குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், தன்னை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நீலகிரி நகராட்சி ஆணையர் மார்ச் 29ம் தேதி நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் தகுதியை குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட நீதிபதிகளுக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு நகராட்சி ஆணையர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கடிதம் அனுப்பியுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி, ஏற்கனவே கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்ட தன் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கபட்டுள்ளதாகவும்எனவே அதன் அடிப்படையில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து கூடலூர் நகராட்சி ஆணையர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்...

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com