அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? இன்று வெளியாகிறது பட்டியல்!!

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் யார்? இன்று வெளியாகிறது பட்டியல்!!

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள இரு வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இதில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதனிடையே ஜெயகுமார், சிவி.சண்முகம், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மாநிலங்களவை பதவியை எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்படாது எனவும் அதிமுக வேட்பாளர்களாக இன்பதுரை, ராஜ் சத்யன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com