சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஆங்காங்கே வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 123 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பொதுக்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
சென்னை நந்தனத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கி புதிய மாணவர் விடுதி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனிமேல் சமபந்தி போஜனம்- சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.