மக்களுக்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின்

அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில், மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் கண்டறியப்பட்டால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மக்களுக்கு நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஸ்டாலின்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர், அதிமுக ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட செயல்படுத்தாத திட்டங்கள் தொடர்பாக பட்டியலிட்டார்..

குறிப்பாக, 2011- 12 முதல் 2020-21 வரை 110 விதியின் கீழ் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 538 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளதாகவும், செயல்படுத்த இயலாத திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதோடு,20 அறிவிப்புகளுக்கு அரசாணை எதுவும் வெளியிடவில்லை என கூறினார்.

மேலும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன், 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம், பொது இடங்களில் இலவச வைஃபை, வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம், தடையில்லா மின்சாரத்திற்கு சிறப்பு திட்டம்,பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க மாணவர் சிறப்பு படை, மோனோ ரயில் திட்டம், வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்துக்கள் செறிவூட்டப்பட்ட ஆவின் பால் ஒரு லிட்டர் ரூபாய் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அதிமுக அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளாக காகிதத்தில் மட்டுமே உள்ளதாகவும் விமர்சனம் செய்தார். இது எனது அரசு அல்ல நமது அரசு என கூறிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறுவது 10 மாத குழந்தை இடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல் உள்ளதாகவும், திமுக அரசு சொன்னது மட்டுமல்ல சொன்னதற்கு மேலும் செய்து காட்டும் அரசு என மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில் மக்களுக்கு மிகவும் பயன்படும் தேவைகள் கண்டறியப்பட்டால் அந்த வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதிப்பட கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com