இன்று புனித வெள்ளி: கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

இயேசு சிலுவையில்‌ மரித்ததையும்‌, அவர்‌ அடைந்த துன்பங்களையும்‌ நினைவு கூறும்‌ விதமாக இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
இன்று புனித வெள்ளி: கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும், அந்த வகையில் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நிலையில் இன்று அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாட்டிற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இயேசவின்‌ சீடரான யூதாஸ்‌ 30 வெள்ளி காசுக்காக இயேசுவை காட்டி கொடுத்தார்‌, பின்‌ ஜெருசலத்தில்‌ உள்ள காவலர்களால்‌ இயேசு கைது செய்யப்பட்டார்‌. இயேசு முள்‌ கிரீடத்தை அணிந்து கொண்டு சிலுவையை சுமந்து கல்வாரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர்‌ பல துன்பங்களையும்‌ அடைந்து பின்‌ இயேசு சிலுவையில்‌ அறையப்பட்டு உயிர்‌ நீத்தார்‌. அதனை நினைவு கூறும் வகையில் தான் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.

இதற்காக கிறிஸ்தவ மக்கள் 40 நாள் விரதம் இருந்து இந்த புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com