சென்னை சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில் பங்குனி சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் பத்து நாள் தொடர்ச்சியாக உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நாளை அறுபத்தி மூன்று நாயன்மார்கள் சைதாப்பேட்டை பகுதி முழுவதுமாக வலம் வருவார்கள் இதனை காண்பதற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிவபெருமானை தரிசனம் செய்வார்கள். அதுமட்டுமில்லாமல் வருகின்ற சனிக்கிழமை அன்று திருக்கல்யாணமும் நடைபெற இருக்கின்றது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது இதற்காக ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வழிநெடுகிலும் காத்திருக்கிறார்கள். குறிப்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவில் திருவிழாவை மக்கள் இந்த 10 நாட்களாக மகிழ்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.