ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் துவக்கம்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ப்ளாக்-1-ன் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 47 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, மருத்துவமனை ப்ளாக்-3ன் தரை தளத்தில், நெடுஞ்சாலைத் துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II நிதியின் கீழ் ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் இருபது 108 அவசரகால வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல, மருத்துவமனை ப்ளாக்-3ன் 8 ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரூ.364.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2099 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் மற்றும், செங்கல்பட்டில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமையப்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டடம் உள்ளிட்டவைகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள 292 மருத்துவமனையில் 2099 அதிநவீன தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது,

அதில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மட்டும் நாற்பத்தி ஏழு படுக்கைகள் ஆகும். அரசு மருத்துவமனையில் உலகத்தரத்தில் நவீன சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையின் தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் கூட இருக்க வேண்டுமென தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாத காலத்தில் மட்டும் 364 கோடியில் திட்ட பணிகள் 292 மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும் எக்காலத்திலும் அரசு மருத்துவ பணிகள் இவ்வளவு விரைந்து செயல்படவில்லை.

மேலும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டம் தொடங்கப்பட்ட பின், இதுவரை விபத்தில் சிக்கிய 46,102 பேர் 640 மருத்துவமனைகளில் 40.57 கோடி செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com