தமிழ் என்றால் நான் எந்த நேரத்திலும் வர தயார் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கருணாநிதி உருவ சிலையை பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர்,அஹா 100 சதவீதம் தமிழ் பொழுதுபோக்கு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து திரைத் துறையில் சாதனை புரிந்த 7 சாதனையாளர்களுக்கு கலைஞர் கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் என்றால் நான் எந்த நேரத்திலும் வர தயார். ஒரு காலத்தில் வானொளி மூலம் செய்தி அறிந்து கொண்டோம். பிறகு செய்தித்தாள் மூலம் தெரிந்துக்கொண்டோம். தற்போது செல்போனில் அனைத்து தகவல்களும் தற்போது தெரிந்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.