அண்ணாமலை 24 மணி நேரத்தில் விளக்கம் வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி !!

 அண்ணாமலை 24 மணி நேரத்தில் விளக்கம் வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி !!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழகம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை திறந்து வைக்கவும்,தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார்.

முதலமைச்சரின் இந்த பயணம் குறித்து பேசிய பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை, கோபாலபுரம் நிதியைப் பெருக்கவும், குடும்பத்தை வளர்க்கவும் துபாய் சென்றுள்ளார் என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பிபிய நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள  அரசு முறை துபாய் பயணத்தை, கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பி உள்ளார்.

அண்ணாமலையின் கருத்திற்கு அவர் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்காத பட்சத்தில் கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.

பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக திகழும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக போய் கருத்துக்களை பரப்பி வருவதாக கூறினார்.

அரசு பயணத்தை,சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டும் அண்ணாமலை, அப்போது பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் சொந்த முதலீடு செய்வதற்காக என்ற கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சரை இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் எடுக்கப்படும் சட்டப் போராட்டத்தை அண்ணாமலையால் தாங்க முடியாது எனவும் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com