தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து விடுதலைக்காக போராடிய தலைவர்களில் தீரன், சின்னமலை குறிப்பிடத்தக்கவர். கிழக்கிந்திய கம்பெனியினரின் ஆதிக்கத்தை விரும்பாத சின்னமலை தொடர்ந்து எதிர்த்து வந்தார்.
தீரன் சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்று கருதிய ஆங்கிலேயர்கள், சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து சின்னமலையை தூக்கிலிட்டனர். தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றி நினைவு கூறும் வகையிலும் அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் அவரது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.