காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டை பெற மூத்த நிர்வாகியாக உள்ள பா.சிதம்பரம் மற்றும் கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா சீட்டுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பாக போட்டியிடக்கூடிய மூன்று வேட்பாளர்களை அறிவித்தது உள்ளனர்.
அதிமுக சார்பாக போட்டியிடக் கூடிய இரண்டு வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா சீட்டை பெற இரண்டு நபர்களில் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.