விரைவில் அண்ணாமலைக்கு டிக்கெட் தரப்படும்... ஆர்.எஸ்.பாரதி சாடல்!!

அடிப்படை அறிவு கூட இல்லாத அண்ணாமலைக்கு யார் ஐ.பி.எஸ். பட்டம் தந்தது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 விரைவில் அண்ணாமலைக்கு டிக்கெட் தரப்படும்... ஆர்.எஸ்.பாரதி சாடல்!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஆலந்தூர் பகுதி திமுக சார்பில் தமிழக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் கட்சி பொருளாளருமான டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, திமுக ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சி என உருவாக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மாநில சுயாட்சி கொள்கையுடன் சமூக நீதி இணைந்தது தான் திராவிட மாடல். மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை 1970ல் முன்மொழியப்பட்டது. 69 சதவீதம் இடஒதுக்கீடு பெற போராடினோம். நீட் தேர்வு பிறகு 49 சதவீதம் தான் தருகின்றனர்.

மாநில சுயாட்சி இல்லாததால் 69 சதவீதம் கிடைக்கவில்லை. கல்லூரி, வேலை வாய்ப்புகளில் மாநிலத்தில் 69 சதவீதம் கிடைக்கிறது. மத்தியில் வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 27 சதவீதம் தான் கிடைக்கிறது. மாநில சுயாட்சி என்பது உரிமைகளை பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் வளர வேண்டும். இந்த திராவிட மாடல் விரைவில் முழுமையாக கிடைக்கும் என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பஸ்சில் பயணிகளின் வசரியை பார்க்க சென்ற முதல்வர் டிக்கெட் வாங்கி சென்றாரா என்று அண்ணாமலை கேட்கிறார். எம்.எல்.ஏ., எம்.பி. இலவசமாக செல்லலாம். அடிப்படை அறிவு கூட இல்லாத அண்ணாமலைக்கு யார் ஐ.பி.எஸ். பட்டம் தந்தது. விரைவில் அண்ணாமலைக்கு டிக்கெட் தரப்படும்.

கர்நாடகாவில் எத்தனை பேரை சுட்டுவிட்டு வந்தார் தெரியுமா என்கிறார்கள். அண்ணாவை பற்றிய பேசிய கிருபனந்த வாரியார் வெளியே வர முடியாத நிலை. எம்.ஜி.ஆருக்கு பொன்மன செம்மல் படத்தை தந்த பின்னரே வந்தார். அதே நிலை அண்ணாமலைக்கு ஏற்படும் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com