தமிழ்நாட்டை கலைஞர் நாடு என கூட விரைவில் மாற்றி விடுவார்கள்

முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் நிழல் முதல்வராக செயல்பட்டு வருகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும் மக்களுக்கு தெரிந்த புகழ்பெற்ற சாலை ஈசிஆர் சாலை என்று கூறினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு பெயர் மாற்றப்படுவதை பொதுமக்களை விரும்ப மாட்டார்கள் எனவும் அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகத்தை அதிகப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகிறது என்றும் விரைவில் தமிழ்நாட்டை கலைஞர் நாடு என கூட மாற்றி விடுவார்கள் என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அதிமுக எனக்கு என்ன பண்ணி கொடுத்தாலும் நான் சிறப்பாக செய்வேன் என்றும் அதிமுகவில் மட்டுமே கொடி கட்டுபவன் கூட முதல்வராக முடியும் ஆனால் திமுகவில் நேரு, பொன்முடி போன்றவர் ஸ்டாலினுக்கு அடுத்து வர முடியுமா ? திமுகவில் அது போன்ற நிலைமை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் ஜமீன்தார் களாக இருக்கிறார்கள் அவர்கள் தப்பித்தவறி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளார்கள் என்றும் அவர்களது ஆட்சியை விமர்சனம் செய்தார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அதிகரித்துள்ளதாகவும் விலைவாசி மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதியுற்று வருவதாகவும் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதியதை யாராலும் மறக்க முடியாது.

அதே போன்று தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவியர் மோதிக் கொள்வது வேதனை அளிக்கிறது என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை விழிப்போடு இருந்தால் மாணவிகள் சண்டை போல் பிரச்சனைகள் வராது என்றும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அமைச்சர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதனால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் வருவதாகவும் இது கவலைக் கொள்ள வேண்டிய விஷயம் எனவும் கூறினார்

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மட்டுமே என்றும் இந்தியை பயன்படுத்துவது துரோகம் என்றும் ஹிந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிற தாகவும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com