மறைந்த நடிகர் விவேக்வின் பெயரை அவர் வாழ்ந்து மறைந்த விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி சாலையை சின்னக் கலைவானர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சென்னை மாநகராட்சி மேயர் ராஜன் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ளவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. சைதாப்பேட்டை பகுதியில் நாட்டு மரங்கள் நிறைய நாட்டு வைத்து இருக்கிறோம்.
இன்னும் இரண்டு ஆண்டில் வனத்தில் ஒரு தொகுதி என்ற நிலைமையில் சைதாப்பேட்டை தொகுதி இருக்கும். சைதாப்பேட்டையில் தொகுதியில் மரங்கள் அதிகமாக நட வேண்டும் என்று 2000 மரங்களை நடுவதற்கு திட்டம் போடப்பட்டு அந்த 2000 ஆவது மரத்தை நடுவதற்கு விவேக்கை அழைத்து வந்தோம். அப்போது அவர் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலமாக ஒரு லட்சம் மரம் ஏற்கனவே அவர் நட்டு வருவதாகவும் தற்போது இந்த மரத்துடன் சேர்த்துக் கொள்வதாக தெரிவித்தார்.
அதன் பிறகு நான் அவரின் கனவை நினைவக்க தொடர்ந்து மரம் நட்டு வருகிறேன். சைதாப்பேட்டை 98 ஆயிரம் மரம் தற்போது வரையும் நட்டு இருக்கிறோம். 1 கோடி மரம் நட்டு அந்த 1 கோடி ஆவது மரத்திற்கு நடிகர் விவேக் மரம் என்ற பெயர் வைக்க இருக்கிறோம். ஆனால் அதனை பார்க்க அவர் தான் இல்லை.
பொதுவாக தற்போது பெயரை சாலைக்கு வைப்பது இல்லை. அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் பல்வேறு இடங்களில் அதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் விவேக் பெயரை வைக்க வேண்டும் கேட்டவுடன் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
விவேக் மறைவுக்கு 2 நாட்களுக்கு முன்பு அப்போது இருந்த ஆளும் கட்சியாக இருந்தவர்கள் விவேகை தடுப்பூசி செலுத்தி கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்கள். அவர் இறப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு கூட தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு உயிரிழந்து இருக்கிறார். தமிழகத்தில் 11 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். 88% நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை தடுப்பூசி செலுத்துவது விருப்பத்துடன் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிறார்கள். வரும் 8 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இன்றும் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தமிழக அரசும், திமுகவும் துணை நிற்கும் என தெரிவித்தார்.