கொரோனா எந்த வடிவில் வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார்-மா.சுப்பிரமணியன்.

தமிழகத்தில் எந்த வடிவில் கொரோனா வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா எந்த வடிவில் வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார்-மா.சுப்பிரமணியன்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள திருநீர்மலை சாலையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் கொரோனா பாதிப்பு என ஒரு நோயாளி என யாரும் வரவில்லை, கடந்த ஒரு மாதமாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. 30 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பதிவாகாத நிலையில் 22 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இனி அந்த 22 பேரூம் இல்லாமல் பூஜ்ஜியம் என்கிற நிலைக்கு கொண்டு செல்வதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் கொரோனா பல்வேறு உறுமாற்றம் அடைந்தாலும் அதனை ஆய்வு செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கொரோனா எந்த வடிவில் வந்தாலும் சமாளிக்க முடியும்.

அதற்கு தான் தமிழக முதல்வர் ரூ.365 கோடி செலவில் தமிழகம் முழுவதும் கொரோனா அதி தீவிர சிகிச்சை மையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் படி வருகிற 14 ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அதிநவின சிகிச்சை மையத்தை திறந்து வைக்கின்றார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com