சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் ;
திராவிட என்பதற்கு நான் எந்த ஒரு முகமூடியும் போட மாட்டேன் ஏனென்றால் நான் முதலில் தமிழர்
மேலும் எருமை மாட்டையும் திராவிடத்தையும் ஒப்பிட்டு பேசியதற்கு பதில் கூறிய சீமான் உழைக்கும் மக்களில் நிறம் கருப்பு என்றும்
அண்ணாமலையும் தன்னை கருப்பு என்கிறார் இருவரையும் விட எருமையும் கருப்புதான் என்று கூறினேன் மேலும் பணமரம் ,மயில் குயில் ,அனைத்தையும் கருப்புதான் என்று சொல்லிய சீமான் தலையில் கைவைத்து முடியை தொட்டு இதுவும் கருப்புதான் என்று கூறினார்
நான் திராவிடன் கருப்பு என்று அண்ணாமலை கூறுவதற்கு ஸ்டாலின் மற்றும் கி.வீரமணியிடம் தான் கேக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர்
ஆரியர்களே நாங்கள் திராவிடர்கள் என்று கூறினால் என்ன செய்வது? பெரியார் சமாதியில் சண்டையிட்டு கொள்வதா?
எல்லாம் ஜாதியினரும் அட்சகர் ஆகலாம் என கூறுகிறார்கள் என்னை கோவிலில் இருந்து வெளியேற்றியது யார் ?ஸ்டாலின் இதற்கு பதில் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார் . மேலும் ,பாஜக தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் கேள்வி எழுப்பிய பொழுது ,நான் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்க விருப்பவில்லை நான் எப்போதும் முதவலவது கட்சியகதான் இருக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் வெட்டு என எழுப்பட்ட கேள்விக்கு,
ஜப்பான் கடல் அலையில் மின்சாரம் தயாரிக்கப் படுகின்றன காற்றிலில் இருந்தும், கடல் அலையில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்றும தமிழகத்தில் மின் வெட்டுக்கு காரணம் மின்சாரம் வாங்குவதற்கு மட்டுமே முதலீடு செய்கிறார்கள் தவிர உற்பத்தி பண்ணுவதற்கு முதலீடு செய்ய மறுக்கிறார்கள்.
மாற்று வழி மின்சாரம் குறித்து சிந்திப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டி அவர்,
சிதம்பரத்தில் கோவில் கட்டியது நாங்கள் என் அப்பன் என் முப்பாட்டன் எனவும் ஆனால் இன்றைக்கு தீட்சிதர்கள் செய்யும் அக்கிரமத்தை பார்த்தீர்களா எனவும் தெரிவித்தார் மேலும் பேசிய அவர், தமிழர்களுக்கு கடவுள் இல்லை. ஆனால் எங்கள் மூதாதையர்களை வணங்கும் தெய்வம், இறை நம்பிக்கை உண்டு என்றும் தெரிவித்தார்.