மாடல் அரசிடம் நிதியை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்கிற மாடல் இல்லை… வானதி ஸ்ரீனிவாசன்

மாடல் அரசிடம் நிதியை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்கிற மாடல் இல்லை… வானதி ஸ்ரீனிவாசன்

சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு இந்தியாவிற்கே உதாரணமாக இருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி தினமும் புகழ் பாடுவதை கேட்டு கொண்டிருக்கிறோம். சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது எங்களால் பேச முடியாது, எங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு குறைவு. நிதி பற்றி பேச வேண்டிய துறையின் அமைச்சர், அவருடைய பெருமையையே பேசி கொண்டிருக்கிறார்.

தமிழகத்திற்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பா? இந்தியாவிற்கே வந்த போது கூட மத்திய அரசு திறமையாக கையாண்டது. தமிழகத்திற்கு கொரோனா காலத்தில் 24% அதிகமாக பணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. மாடல் அரசு என்று கூறும் அரசிடம், நிதியை எவ்வாறு பெருக்கி, செலவு செய்ய வேண்டும் என்கிற மாடல் இல்லை. மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய கடன் தொகையை மாநில அரசு எவ்வளவு திருப்பி அளித்துள்ளது என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை நான் கேட்கிறேன் என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com