செய்யாத குற்றத்திற்கு சிறையில் இருந்த பேரறிவாளன் தான் தியாகி... சீமான் அதிரடி!!

மத்திய அரசு போலவே மாநில அரசும் பெட்ரோல் டீசல் விலையை தாமாக முன்வந்து குறைக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான்
சீமான்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 நபர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கூட தூத்துக்குடியில் அனுமதி கிடைக்கவில்லை. அங்கு நடந்தது என் இனத்தின் படுகொலை. வாகனத்தில் ஏறி நின்று சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது.

இதை பற்றி முன்னாள் முதல்வர் இடம் கேட்டும் பொழுது அதை பற்றி தெரியாது நானே தொளைகாட்சியில் பார்த்ததுதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகிறார். அப்போது ஆட்சியிலிருந்த அரசும் இப்போது ஆட்சியில் உள்ள அரசும் இது குறித்தான என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு மறுப்பு இன்றும் தெரிவிக்கவில்லை.

அவர் எத்தனை போராட்டங்களுக்கு நேரில் சென்று பார்த்து இருக்கிறார்.

மேலும் அவர்கள் உயர் தியாகம் செய்ததை வீணாகாமல், அந்த ஆலை மீண்டும் திறக்காமல் இருக்க நாங்கள் போராடுவோம். பெட்ரோல், டீசல் வரி குறைப்பு என்பது எப்போது குறைத்து இருக்க வேண்டும். உங்களால் குறைக்க முடியும் என்றால் முன்பே செய்து இருக்க வேண்டும். பல போராட்டத்திற்கு பிறகு குறைத்து குறைத்து உள்ளார்கள். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு என்பது ஒருநாளைக்கு ஒருவர் சாலையில் வெட்டி கொல்லும் நிலையில் உள்ளது.

ராஜீவ் காந்தி என்ன தியாகம் செய்தார் 31 ஆண்டுகள் செய்யாத குற்றத்திற்கு சிறையில் இருந்த பேரறிவாளன் தான் தியாகி. என் மொத்த இனத்தையும் கொன்று குவித்தது ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் ஆட்சிதான் .அவர் ஒருவரின் மரணத்தில் என்‌மொத்த இனத்தின் மரணத்தை ஈடாக பேசுவது எப்படி? பாஜக அண்ணாமலையும் கே எஸ் அழகிரியையும் என்னுடன் விவாதத்திற்கு வரச் சொல்லுங்கள். இந்த ஒரு செயலுக்காக பாஜகவும் காங்கிரஸும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு காரணம் உண்டா?

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை. நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறியபோது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள். அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன்.

அதிக கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான். அதில் எங்கே திராவிட ஆட்சி உள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com