தமிழகத்தின் இணைப்பு மொழி ஆங்கிலம் -ஓ.பன்னீர்செல்வம்

ஆங்கிலம் தான் தமிழகத்தின் இணைப்பு மொழி என்று அதிமுக ஒருங்கிமைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இணைப்பு மொழி ஆங்கிலம் -ஓ.பன்னீர்செல்வம்

இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டும் என சமீபத்தில் அமித்ஷா பேசியது பெரும் சர்ச்சையானது. அமித்ஷாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழகத்தின் இணைப்பு மொழி ஆங்கிலம் தான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணாவின் இரட்டை மொழி கொள்கை தான் ஜீவாதரமாக இருக்கிறது. எனவே ஆங்கிலம் இணைப்பு மொழி. தமிழ் நம் தாய் மொழி என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com