சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு கலந்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மதத்தின் வாகன போக்குவரத்தில் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு துறை சார்பில் அறிவிக்கப்பட்ட கோரிக்கைகள், அறிவிப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே 620 கோவில்களில் 666 கோடி ரூபாய் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு கூடுதலாக 2,417 கோவில்களில் 1301.29 ரூபாய் கோடி செலவில் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் சொத்துக்கள் பிரிக்கப்படும் நடவடிக்கைகள், தங்க நகைகளை உருக்குவது, 7 ராஜ கோபுரங்கள் பணி, 3 தங்க தேர், 2 வெள்ளி தேர், அறிவித்துள்ள அறிவிப்புகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், இந்தாண்டுக்குள் அனைத்து அறிப்புகளும் 9 நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பான கேள்விக்கு, நல்ல முறையில் நிகழ்ச்சி நடைபெற தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் மேற்கொண்டு உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வடகலை தென்கலை பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் வருகிறது. எந்த அளவுக்கு சுமுகமாக செல்ல முடியுமோ அந்த அளவிற்கு அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது.
இவ்விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிகளவில் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்போம். வாயில்லா ஜீவன்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பசு மடங்கள் அமைக்கப்படும்.
பல்லக்கு தூக்கி அரசியல் செய்ய வேண்டும் என்கிற அவசியம் திமுகவிற்கு இல்லை. ஆத்திகர்கள், நாத்திகர்கள் என அனைவரும் போற்று கூடிய அரசாகதான் இந்த அரசு இருக்கும்.
பல்வேறு மக்கள் கோரிக்கை ஏற்று சிதம்பரத்தில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பல தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர். மக்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு தொடர்ந்து எடுக்கும் என்று தெரிவித்தார்.