யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும்....

இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு காண முடியாத பொற்கால ஆட்சியை திமுக அரசு தரும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை திருவல்லிக்கேணி திமுக சார்பில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,பல வகைகளில் இந்த அரசு முன்மாதிரியான அரசு என பலர் கூறியிருக்கிறார்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் எதிர்கட்சி மற்றும் எதிர்கட்சி துணை தலைவர்கள், எங்கள் உரையின் போது குறிக்கிட்டு, நீங்கள் கொடுத்த பட்ஜெட்டில் சிறப்பு இல்லை என பல குறைகளை கூறியிருக்கிறார்கள், அந்த அடிப்படையில் நான் அவர்களை கேட்கிற ஒரே கேள்வி, 2021 பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட்டை நீங்கள் சமர்பித்தீர்கள் அப்போது, கொரோனா இரண்டாவதாக தொடங்கும் என்றோ பருவ மழை அதிகமாகப் பெய்யும் என்று யாரும் கணிக்க முடியாத சூழல்

ஆனால், கொரோனா மற்றும் மழைக்காலங்களில் நீங்கள் உருவாக்கிய பட்ஜெட்டை விட 10 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து இவற்றிற்கு நாங்கள் முடிவு கண்டுள்ளோம்.

இந்தியாவில் ஒரு எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டை, நாடே திரும்பி பார்க்க செய்தவர் எங்கள் முதல்வர் ஸ்டாலின் தான்.ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பு சட்டமன்றம், அதுதான் புது சட்டங்களை உருவாக்கவும், இருக்கும் சட்டங்களை திருத்தவும் உருவாகியது, ஆனால் கடந்த 5 வருடம் சட்டமன்றம் எவ்வாறு நடந்தது? எவ்வளவு அநாகரீகம், எவ்வளவு அராஜகமாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.

அன்றைய சட்டமன்ற கூட்டத்தில் ஜனநாயக மரபை மீறி யார் யாரையோ அவையில் இருந்து வெளியேற்றினார்கள், இவர்கள் போன்ற ஜனநாயகம் எந்த மாநிலத்திலேயும் இருக்க முடியாது.

ஒரு முதலமைச்சர் எந்த துறையிலும் அனைத்து பணிகளையும் செய்ய முடியாது.அதற்காக அமைக்க பட்டது தான் அமைச்சரவை மற்றும் துறை சார்ந்த குழு ஆதி திராவிடர்களுக்கென ஒரு குழு இதுவரை அமைக்கப்படவில்லை, இந்த ஆட்சியில் தான் அமைக்கப்பட்டுள்ளது அவற்றை தலைவர் கவனித்து, குழுவை வழி நடத்துகிறார்.

அந்த குழுவுடன் அமைக்கப்பட்ட கூட்டத்தில் கேட்கப்பட்ட கோரிக்கைகளை கொண்டு, அடுத்த நாள் காலை சட்டமன்றத்தில் 110 விதிகளின் படி அவர்களது கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் முன் வைக்கிறார் இவரை போல ஒரு முதல்வரை பார்த்து இருக்கிறீர்களா? இதுதான் அவரது செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு முதல்வர்.. நான் முதன்மையான முதல்வர் என்பதை விட, தமிழகம் முதன்மையான மாநிலமாக மாற வேண்டும் என சொல்கிறார்

சட்டமன்றத்தில் 3540 கோப்புகளில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது பின் கையெழுத்து இட்டு இருக்கிறேன்

ஆனால் இதுவரை ஒரு முறை கூட தவறு என முதல்வர் என்னை அழைத்து கேட்டது இல்லை

ஒவ்வொரு ஆண்டும் இதனை தாண்டி அடுத்த சாதனைக்கு முன்னேற்றி செல்வோம் என்ற உறுதியை உங்களுக்கு வழங்குகிறேன் இன்னும் 5 ஆண்டுகளில் யாரும் கனவு கான முடியாத பொற்கால ஆட்சியை இந்த அரசு தரும் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com