தமிழகத்தில் இலங்கை மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்

தமிழகத்தில் இலங்கை அகதி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று முதல் துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 8.22 லட்சம் தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது, இதில் குறிப்பாக மாணவர்கள் 3.91 பேரும் மாணவிகள் 4.31 லட்சமாகவும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதுமாக 3081 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யபட்டு, அரசு தேர்வுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தேர்வுகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை சாந்தோம் ரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வின் போது முறைகேடுகளை தவிர்க்க தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 37 பேர் கொண்ட உயர்நிலைக் குழு கீழ் 4000 க்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் நியமிக்க பட்டுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை கல்வி அலுவலர், தேர்வு துறை முதன்மை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்தேன் எனவும், தைரியமாக மகிழ்ச்சியோடு பதட்டப்படாமல் எழுதுங்கள் என கூறிவிட்டு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு வந்த உடன் நடைபெறும் முதல் பொது தேர்வு என பேசிய அவர், இந்த தேர்வின் முடிவுகள் வருகிற ஜுலைக்குள் வெளிவரும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் என்ன எழுதுகிறார்களோ அதற்கான உரிய மதிப்பெண் வழங்கப்படும் என அவர் பேசினார். இறுதியாக இலங்கை அகதிகள் கல்வி குறித்த கேள்விக்கு, இலங்கை அகதி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரும் அதற்கான நல்ல முடிவுகளை எடுப்பர் என பேசினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com