அதிமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர்..பட்டியல் போட்டு அதிரடி

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
அதிமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர்..பட்டியல் போட்டு அதிரடி

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக நடைப்பெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் விரிவான பதில் உரை அளித்தார்....

அப்போது பேசிய அவர், கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் ஆட்சி பொறுப்பேற்ற சில நிமிடங்களில் கோப்புகளில் கையெழுத்திட்டதாகவும்,5ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் எனவும் கூறினார்.

மேலும், கொரோனாவால் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கு நிவாரணம், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு போன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், அரசு பொறுப்பேற்ற 10 மாதங்களில் 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும் உறுதிப்பட கூறினார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com