நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை- திருச்சி சிவா காட்டம்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என டெல்லியில் திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை மத்திய அரசு மதிக்கவில்லை- திருச்சி சிவா காட்டம்

பெட்ரோல் & டீசல் விலை ஏற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் விவாதத்திற்கு மத்திய அரசு ஏற்காத நிலையில் மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தினசரியாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு 9 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நடுத்தர மக்களையும், டீசல் விலை அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வழிவகை செய்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் குறைந்துள்ள நிலையிலும் பெட்ரோல் & டீசல் விலை குறைக்க அரசு மறுக்கிறது என்றார்.

மேலும் விறகில் சமையல் செய்து வந்த நிலையில் அவை சுற்றுசூழலை பாதிக்கும் என கூறி எரிவாயு உருளையை வழங்கினர். ஆனால் இப்போது அதன் விலை உயர்ந்து அதனால் மக்களே பாதிக்கப்படுகிறார்கள். மத்திய அரசை பொறுத்தவரை விலையேற்றம் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இல்லை. அதனலையே அவையை ஒத்திவைத்து கொண்டு இருக்கிறது என்று விமர்சித்தார்.

பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தை மதிக்கும் அழகு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நடத்தும் விதத்தை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது என்ற அவர், மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கவில்லை என விமர்சித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com