தமிழகத்திற்கு அடுக்கடுக்கான துரோகங்களை செய்யும் பாஜக

கர்நாடக பாஜகவும் ஒன்றிய பாஜக அரசும் அடுக்கடுக்கான துரோகங்களை தமிழகத்திற்கு செய்வதால் தான் இந்த போராட்டம் என வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அடுக்கடுக்கான துரோகங்களை செய்யும் பாஜக

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்தும் மற்றும் அதற்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் அஞ்சல் துறை வேலை வாய்ப்புகளில் வடமாநிலத்தவர்களை திட்டமிட்டு பணியமர்த்தும் அஞ்சல் துறை நிர்வாகத்தைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகங்கள் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் நிலையதில் மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் கட்சி தொண்டர்களுடன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

கர்நாடக அரசு மேகதாது அருகே அணை கட்ட முயற்சிப்பதில் மத்திய பாஜக துணை போகிறது எனவும்

அமைச்சர் துரைமுருகன் தலமையில் அனைத்துக்கட்சி குழு மத்தியில் சென்று பேசியபோது கண்டிப்பாக அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என கூறினார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com