சட்டசபை துதிபாடும் சபையாக மாறிவிட்டது... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!
திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை காலத்தில் மக்கள் தாகத்தை தீர்க்கும் வகையில் பந்தல் அமைத்து வருகிறது.
வேறு எந்த கட்சியும் தண்ணீர் பந்தல் திறக்கவில்லை. அரசை பொருத்தவரையில் மக்கள் எப்படி போனாலும் பிரச்சனை இல்லை என்று இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. மேலும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது. திமுக ஆட்சியில், கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவை சாதாரணமாக நடைபெறுகிறது. காலம் காலமாக இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
மக்களை பற்றி கவலைப்படாத அரசாக, விளம்பரத்திற்கான அமசாக, ஸ்டன்ட் அரசாக உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்டாண்ட் மேனாக செயல்பட்டு வருகிறார். காவல்துறை தப்பிற்கு காவல் துறை விசாரணையா? திமுக ஆட்சியில் தான் 5 பேர் லாக்கேப் பில் மரணம் ஆகி உள்ளனர். அதற்கு முதல்வர் தான் பதில் கூற வேண்டும். மேலும், சட்டசபை துதிபாடும்,
ஜால்ரா சபையாக மாறிவிட்டது, ஜனநாயகப்படி சட்டப்பேரவை நடைபெறவில்லை.
மத விவகாரத்தில் அரசு முக்கை நுழைக்கமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெட்ரோல் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு திமுக தோழமை கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை?. திமுகவில் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர். இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறுவார்கள். திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வில்லை என்றால் ஆல் அட்ரஸ் இல்லாமல் பொய் இருக்கும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வி அடையும். தேர்தலுக்காக நிறைய வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து விட்டு தற்போது அதனை நிறைவேற்றமால் நிதி பற்றாக்குறை என்று நிதியமைச்சர் தெரிவிக்கிறார்.
மீனவர்களின் பாதுகாப்பிற்காக பேசக்கூடியவர்கள், எழுத்தளவில் மட்டும் தான் கடிதம் எழுதியிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.