முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக்கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவைக்கூட்டம்

சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை நடைபெறவுள்ளது.

சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதேபோன்று நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com