தேசத் துரோக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் தடை விதிப்பு… தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்பு!!

தேசத் துரோக 124-ஏ சட்டப் பிரிவுக்கு உச்சநீதிமன்றத் தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தேசத் துரோக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் தடை விதிப்பு… தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்பு!!

தேசத் துரோக சட்டப் பிரிவு 124-ஏ-வை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக 124-ஏ-வை மறுபரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்திருப்பதால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று ஆணையிட்டிருப்பதை ஜனநாயகவாதிகள் அனைவரும் வரவேற்பார்கள் என்பது உறுதி. ஏற்கெனவே இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைகளுக்கும் தடை விதித்துள்ளதும் வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

பிரிட்டிஷ் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தக் கருப்புச் சட்டத்தையே இந்த 75 ஆண்டுகால சுதந்திரத்திலும் இப்படி தொடருவது முறையல்ல, நியாயமல்ல என்ற நேர்மையான கோரிக்கை இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையின் மூலம் ஒரு புதிய ஒளியை ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பாக அமைந்துள்ளது.

இதுபோல காலாவதியாக வேண்டிய காலனிய சட்டங்கள் பல உள்ளன; அவற்றிற்கும் இத்தகைய தடைகளை விதித்து, உண்மை சுதந்திர ஆட்சிக்கு 75 ஆண்டுகாலத்திற்குப் பிறகாவது விடியல் ஏற்படுத்தினால், தேவையற்ற அச்சுறுத்தல்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com