தனியார் மருத்துவமனைகளுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

தனியார் மருத்துவமனைகளுக்கு மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால், திட்டத்தில் இருந்து அந்த மருத்துவமனை விளக்கி வைக்கப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 414 பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

10 ஆயிரத்து 703 கோடி ரூபாய் செலவில் இதுவரை 1.9 கோடி நபர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன் பெற்றுள்ளனர். அதிநவீன வசதியோடு 35 கோடி செலவில் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இயந்திர மனிதவியல் சிகிச்சை அரங்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு வெற்றிகரமான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகு மிக விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்

தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால், 104 எண்ணிற்கு புகார் அளிக்கலாம். விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திட்டத்தில் இருந்து அந்த மருத்துவமனை விளக்கி வைக்கப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். சீனா, மேற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com