அடிபணிவது என்பது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது... எச். ராஜா விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!!

அடிபணிவது என்பது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது எனறு எச்.ராஜா விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

வியாசர்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரர் கோவிலையும் அதன் அருகில் இருந்த தெப்பக்குளத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது சட்டமன்ற பேரவை நடைபெற்று வருகிற நிலையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோவிலின் தெப்பக்குளத்தில் மதில் சுவர் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் கோவில் ஆய்வு செய்தேன். விருப்பம் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என இந்து அறநிலை துறை சார்பாக அறிவித்திருந்தது. அதனடிப்படையில் விருப்பமுள்ள திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகின்றன. அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது.

ஒரு காலத்தில் இந்துக்களுக்கு எதிரான கட்சி தான் திமுக என கூறி வந்தனர். அப்படி சொன்னால் அது மிகை ஆகாது. அனைத்து மதத்திற்கும் சமமான ஆட்சிதான் நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில்தான் தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச விஷயத்தில் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும் பழமையை அழிய விடக்கூடாது தொன்றுதொட்டு நடைபெற்று வந்த ஒரு விஷயத்தை மாற்றக் கூடாது என்கின்ற அடிப்படையில் மற்றும் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று தான் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அறநிலைத்துறை சொந்தமான 49 கோயில்களில் உள்ள யானைகள் கோடை காலத்தில் புத்தணர்ச்சி பெறுவதற்காக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com